பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் 30000 கோடி செலுத்த உத்தரவு 

அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக 22 பெண்கள் தொடர்ந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்க்கு அந்த நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பீடும் நீதிமன்றத்து பெருமளவு அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 | 

பிரபல அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் மருத்துவப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகும் முக்கியமாக குழந்தைகளுக்கான இதன் தயாரிப்புகள் மிகவும் பிரபலம். இந்த நிலையில் இந்த நிறுவனம் தயாரித்து வழங்கும் முகப்பவுடரில் சேர்க்கப்படுகிற ஆஸ்பெஸ்டாஸ் என்னும் வேதிப் பொருள் இருப்பதாகவும் அது, சினைப்பை புற்றுநோயை ஏற்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்தது. 

மிசவுரி மாகாணத்தின் செயிண்ட் லூயிஸ் நகரைச் சேர்ந்த 22 பெண்களும், அவர்களது குடும்பத்தினரும் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை அங்குள்ள சிவில் கோர்ட்டு விசாரித்தது. வழக்கு தொடர்ந்த 22 பேரில் 6 பேர் ஏற்கெனவே புற்றுநோயால் இறந்துவிட்டனர்.

விசாரணையின்போது, தனிப்பட்ட சுகாதாரத்துக்காக தாங்கள் பயன்படுத்திய முகப்பவுடர்தான் தங்களுக்கு சினைப்பை புற்றுநோயை வர வைத்து விட்டது என்று வழக்குதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் அந்த முகப்பவுடர் நிறுவனம், குற்றச்சாட்டை மறுத்தது. "எங்கள் முகப்பவுடரில் ஆஸ்பெஸ்டாசும் இல்லை, எங்கள் முகப்பவுடர் புற்றுநோய் தாக்க காரணமாகவும் அமையவில்லை" என்று கூறியது. 

தனது பவுடரில் அஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பது நிறுவனத்திற்கு 1970களிலேயே தெரிந்த போதிலும், அதன் அபாயங்களைப் பற்றி இந்நிறுவனம் நுகர்வோரை எச்சரிக்கத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்

தொடர்ந்து 6 வாரங்கள் நடைபெற்ற நிலையில் அதன்முடிவில் அந்த நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 550 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,740 கோடியும்), அபராதமாக 5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.27 ஆயிரத்து 880 கோடி) செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

எனினும் இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP