'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்..

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய வம்சாவளி மக்களிடையே உரையாற்ற இருக்கிறார்
 | 

'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்..

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய வம்சாவளி மக்களிடையே உரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம் கலந்து கொள்கிறார்.

இரு நாட்டுத் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றும் இந்த நிகழ்வு உலக நாடுகளின் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். 'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்..

பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கு வந்ததை அடுத்து இந்தியர்கள் அனைவரும் உற்சாகத்துடன் முழக்கமிட்டனர்.அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சி சிறப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP