ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமா?

ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால், அங்கு செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
 | 

ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமா?

ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால், அங்கு செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது. அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள தகவலின் படி, "ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருவதால், மக்கள் அதிகமாக கூடுவதை பயன்படுத்தி தீவிரவாதிகள் அங்கு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. முக்கியமாக  மைதானம், ரசிகர்கள் கூடும் இடங்கள், சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. எனவே  அமெரிக்காவில் இருந்து கால்பந்து போட்டிகளை காண செல்பவர்கள் பயணத்தை  தவிர்க்கலாம். ரஷ்யாவில் போட்டி நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு தான் போடப்பட்டுள்ளது. இருந்தாலும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது. இந்த தகவல் ரஷ்யாவுக்கு செல்லும் மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP