2 வயது ஆட்டிஸ குழந்தையைக் காப்பாற்றிய பிட்புல் நாய்!

அமெரிக்காவில் இருக்கிறது கென்டச்கி என்ற இடம். அங்கிருக்கும் பெத் கெம்பெல் தனது பேத்தி சார்லியை தொலைத்து விட்டார்.
 | 

2 வயது ஆட்டிஸ குழந்தையைக் காப்பாற்றிய பிட்புல் நாய்!

அமெரிக்காவில் இருக்கிறது கென்டச்கி என்ற இடம். அங்கிருக்கும் பெத் கெம்பெல் தனது பேத்தி சார்லியை தொலைத்து விட்டார். அந்தக் குழந்தை ஆட்டிஸ நோயால் பாதிக்கப் பட்ட தத்துக் குழந்தை. அவளோடு சேர்த்து தனது செல்ல நாயான (பிட்புல்) பென்னியையும் காணாமல் போயிருப்பதை அறிந்த பெத் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். 

வியாழக்கிழமை காணாமல் போன இவர்கள் கிடைக்க வேண்டும் என வெள்ளி கிழமை மாலை வரை பிரார்த்தனை செய்திருக்கிறார் பெத். அப்போது தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மலை பகுதியில் இருந்து பென்னி ஓடி வந்திருக்கிறது. நாயைப் பார்த்ததும் தனது பேத்தியும் பக்கத்தில் தான் இருக்க வேண்டும் என தேட தொடங்கியிருக்கிறார் பெத். 

ஒரு மைலுக்குக் குறைவான தூரத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் குழந்தையைக் கண்டுப் பிடித்திருக்கிறார் பெத். உறவினரான வேயனே பிரவுன் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் மலையில் குழந்தையையும் நாயையும் பார்த்து அதிர்ச்சியானதாகவும், உடனே அவளை மீட்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். குழந்தைக்கு துணையாக 2 நாட்கள் காட்டில்  பென்னி இருந்திருக்கிறது. வளர்ப்பு நாயால் வளர்ப்பு குழந்தை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் பெத் குடும்பத்தினர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP