படம் பேசுது: ட்ரம்ப் பேபி சிட்டர்ஸின் போராட்டம்!

பிரிட்டன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டின் பல பகுதிகளிலிருந்து லண்டனில் குவிந்தபடி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் ட்ரம்ப் பேபி சிட்டர்ஸின் போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.
 | 

விசா கட்டுப்பாடு, இறக்குமதி வரி, அகதிகளிடமிருந்து குழந்தைகளை பிரித்தது என அவரது கொள்கைகளுக்கு பிரிட்டனில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. சமூக வலைத்தளங்களிலும் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு ட்ரம்ப் வரக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்தையும் தாண்டி பிரிட்டன் பிரதமர் தெரசா மே அளித்த விருந்தில் பங்கேற்க ட்ரம்ப் நேற்று வந்தபோது அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால் லண்டனில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சி லண்டன் புறநகர் பகுதியில் உள்ள தெரசா மே இல்லத்துக்கு மாற்றப்பட்டது. 

குறிப்பாக ட்ரம்ப்பை கேலிக்குள்ளாக்கும் வகையில் நாடாளுமன்ற சதுக்கத்தில் 'டிரம்ப் பேபி' பலூனை பறக்கவிடும் போராட்டம் நடைபெற்றது. 'டிரம்ப் பேபி சிட்டர்ஸ்' என்னும் போராட்டகாரர்கள் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளனர். 

படம் பேசுது: ட்ரம்ப் பேபி சிட்டர்ஸின் போராட்டம்!

ட்ரமப்  வரும் நேரத்தில் சுமார் 6 மீட்டர் உயரத்துக்கு ட்ரம்ப் போல வடிவமைக்கப்பட்ட ஆரஞ்சு நிற பலூனை விண்ணில் பறக்கவிட்டபோது அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிரிட்டன் நாட்டு நாடாளுமன்றம் அருகே இத்தகைய பலூன் பறக்கவிடப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக கருத்து கூறிய லண்டன் நகர மேயர் சாதிக் கான், ''ட்ரம்ப்புக்கு எதிரான இந்த போராட்டம் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் அல்ல. சிறப்பான உறவுமுறைகளை பேணிவரும் நாடு என்ற முறையில் எங்கள் நாடு மதிக்கப்பட வேண்டும். அந்த நன்மதிப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது இதுபோன்ற போராட்டங்களை தடுக்கவோ, தவிர்க்கவோ இயலாது'' என குறிப்பிட்டார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP