மெக்ஸிக்கோ எல்லையில் சிறுமி அழுவதுபோன்ற புகைப்படத்துக்கு விருது

மெக்ஸிக்கோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருப்பது போன்ற புகைப்படம், இந்த ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட விருதினை தட்டிச்சென்றுள்ளது.
 | 

மெக்ஸிக்கோ எல்லையில் சிறுமி அழுவதுபோன்ற புகைப்படத்துக்கு விருது

மெக்ஸிக்கோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருப்பது போன்ற புகைப்படம், இந்த ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட விருதினை தட்டிச்சென்றுள்ளது.

மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி சிலர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் கைதான சான்ட்ரா சஞ்சேஸ் என்ற பெண், மகள் யனீலாவை அங்கேயே விட்டுவிட்டு, கைது செய்யப்பட்ட ஏனையோருடன் அமெரிக்க படையினரின் வாகனத்தில் செல்ல நேர்ந்தது.

இதனால் இரவு தனித்து விடப்பட்ட சிறுமி பயத்தில் அங்கேயே நின்று அழுதுகொண்டிருந்தாள். இந்த காட்சியை அந்நாட்டு புகைப்பட நிபுணர் ஜான் மூர் தத்துரூபமாக படம் பிடித்திருந்தார்.

4 ஆயிரத்து 738 புகைப்பட நிபுணர்கள் சமர்பித்திருந்த 78 ஆயிரத்து 801 படங்களில், யனீலாவின் இந்த புகைப்படம், இந்த ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட விருதினை வென்றுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP