தீவிரவாதிகளுக்கு எதிராக நிரந்தர நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், நிரந்தர நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
 | 

தீவிரவாதிகளுக்கு எதிராக நிரந்தர நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அளவில் நெருக்கடி எழுந்தது. தீவிரவாதிகள் பதுங்குமிடமாக பாகிஸ்தான் செயல்படக் கூடாதென்றும், தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த வாரம், பாகிஸ்தான் அரசு, ஜெய்ஷ் ஈ முஹம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக அதிரடி ரெய்டு நடத்தி, ஜெய்ஷ் தலைவன் மசூத் அசரின் சகோதரர், மகன் உட்பட 42 பேரை கைது செய்தனர். 

இதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் பல்லடினோ இதுகுறித்து பேசியபோது, "பாகிஸ்தானின் சமீபத்திய நடவடிக்கைகளை அமெரிக்கா கவனித்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தொடர்ந்து, மாற்ற முடியாத அளவுக்கு நிரந்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளின் படி பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்றும் அவர்களின் நிதியை துண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்" என்று கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP