ஆத்திரத்தில் மக்கள்; அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகும் ஜுக்கர்பெர்க்!

கடந்த சில வாரங்களில் உலகையே உலுக்கிய பேஸ்புக் - கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா தகவல் திருட்டு விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் நாளை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகிறார்.
 | 

ஆத்திரத்தில் மக்கள்; அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகும் ஜுக்கர்பெர்க்!

ஆத்திரத்தில் மக்கள்; அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகும் ஜுக்கர்பெர்க்!

கடந்த சில வாரங்களில் உலகையே உலுக்கிய பேஸ்புக் - கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா தகவல் திருட்டு விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் நாளை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகிறார்.

தேர்தல்களில் டிஜிட்டல் பிரச்சாரம் செய்வதாக கூறிவரும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம், பேஸ்புக் பயனாளர்களின் அனுமதியின்றி அவர்களது தகவல்களை திருடியது அம்பலமானது. அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கிறிஸ்டோபர் வைலி என்பவர், இதுகுறித்து ஊடகங்களிடம் தெரிவித்தார். 

சுமார் 8.7 கோடி மக்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா திருடியதாகவும், அதை பேஸ்புக் தடுக்காமல், இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்க தேர்தலில்,  அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் வெல்ல, இந்நிறுவனம் சட்டவிரோதமாக திருடிய தகவல்களை வைத்து செய்த டிஜிட்டல் பிரச்சாரம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

இதேபோல பல தேர்தல்களில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா செயல்பட்டதாகவும், செயல்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. தனது நிறுவனம் தவறு செய்துவிட்டதாகவும், அதற்கு முழு பொறுப்பேற்பதாகவும் ஜுக்கர்பெர்க், மன்னிப்பு கேட்டிருந்தார். 

இந்நலையில், இதுகுறித்து நேரில் விளக்கமளிக்க, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. நாளை அமெரிக்க செனட் சபையிலும், புதனன்று, கீழ்சபையிலும் ஆஜராகி, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மார்க் பதிலளிக்க உள்ளார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்க மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால், மார்க்கிடம் துருவி துருவி பல கேள்விகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி எட் மார்க்லி தனது ட்வீட்டர் பக்கத்தில், "பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் பதில் சொல்ல வேண்டிய நாள் வந்துவிட்டது" என எழுதினார். மற்றொரு ஜனநாயக கட்சி எம்.பி ரோ கண்ணா, "அமெரிக்கர்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா போன்ற மோசமான நிறுவனங்களிடம் இருந்து நாடாளுமன்றம் காக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தனியார் நிறுவனங்கள், தாங்களே தங்களை ஒழுங்குபடுத்த மாட்டார்கள். அதற்கு நாடாளுமன்றம் சட்டம் கொண்டு வர வேண்டும்" என எழுதினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP