இந்தியா மேற்கொண்ட ஏசாட் சோதனைக்கு ஆதரவாக பென்டகன் கருத்து

விண்வெளியில் இருந்து தங்கள் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருதியும், விண்வெளியிலும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் திறனைப் பெற்றிருக்க வேண்டும் என்பதாலுமே இந்தியா ஏசாட் சோதனையை மேற்கொண்டது- பென்டகன்
 | 

இந்தியா மேற்கொண்ட ஏசாட் சோதனைக்கு ஆதரவாக பென்டகன் கருத்து

விண்வெளியில் இருந்து தங்கள் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருதியும், விண்வெளியிலும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் திறனைப் பெற்றிருக்க வேண்டும் என்பதாலுமே இந்தியா ஏசாட் சோதனையை மேற்கொண்டதாக, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

விண்வெளியில் செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் ஏசாட் சோதனையை இந்தியா அண்மையில் மேற்கொண்டது. இதனால் விண்வெளியில் சிதைகூளங்கள் உருவானது குறித்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கவலை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை தொடர்பான செனட் சபை குழுவில் ஆஜராகி விளக்கம் அளித்த பென்டகன் உயரதிகாரி ஜான் ஹைட்டன், இந்தியா தங்கள் நாட்டிற்கு விண்வெளியில் இருந்து எழும் அச்சுறுத்தல்களை கருதியே அவர்கள் அந்த சோதனையை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ஏசாட் சோதனையை இந்தியா நடத்த வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது என செனட் குழு கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த ஜான் ஹைட்டன், விண்வெளியிலும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் திறனைப் பெற்றிருக்க வேண்டும் என இந்தியா நினைத்ததாலேயே ஏசாட் சோதனை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP