எதிர்ப்பை மீறி ஜெருசேலமில் பராகுவே தூதரகம் திறப்பு!

அமெரிக்கா, கவுதமாலாவைத் தொடர்ந்து பராகுவே நாடும் தனது தூதரகத்தினை ஜெருசேலமில் திறந்துள்ளது.
 | 

எதிர்ப்பை மீறி ஜெருசேலமில் பராகுவே தூதரகம் திறப்பு!

எதிர்ப்பை மீறி ஜெருசேலமில் பராகுவே தூதரகம் திறப்பு!

அமெரிக்கா, கவுதமாலாவைத் தொடர்ந்து பராகுவே நாடும் தனது தூதரகத்தினை  ஜெருசேலமில் திறந்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலம் நகரை அறிவிக்கப்பட்டது. இதனை அங்கீகரித்த டிரம்ப்-க்கு எதிராக இஸ்ரேலில் போராட்டம் வெடித்து பின்னர் அமைதி நிலைமைக்கு திரும்பியது. டிரம்ப் அறிவித்தபடி, கடந்த மே 14ம் தேதி டெல் அவிவ்-ல் உள்ள அமெரிக்கா தூதரகம் ஜெருசேலம் நகருக்கு மாற்றப்பட்டது. இதனால் இதனால் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும்  இடையே மீண்டும் ஒரு மோதல் நடந்தது. காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 60 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். 

இதையடுத்து கடந்த மே 16ம் தேதி லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலாவும்  ஜெருசேலம் நகரில் தூதரகத்தை திறந்தது. தொடர்ந்து தற்போது பராகுவே-வும் ஜெருசேலத்தில் தூதரகத்தை இன்று திறந்துள்ளது. இதில் இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நீதன்யாகு, பராகுவே அதிபர் கொரைசியோ கார்டீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பராகுவே நாட்டைத் தொடர்ந்துமற்ற நாடுகளும் ஜெருசலமில் தங்களது தூதரகத்தை திறக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP