தெற்காசிய அமைதிக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்க வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், தெற்காசிய அமைதிக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்க வேண்டும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் வலியுறுத்தியுள்ளார்.
 | 

தெற்காசிய அமைதிக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்க வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்

தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று ஐ.நா. மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஒவ்வொரு நாடும் ஆதரவளிக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் வலியுறுத்தினார். பாகிஸ்தானை குறிப்பிடும் வகையிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருப்பதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்கா சென்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பெண்டகனில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, ஜேம்ஸ் மேட்டீஸ் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா., பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஆகியோர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒவ்வொரும் ஆதரவளிப்பது அவசியம் என்றார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து தாலிபான்களுடனான போர் முடிவுக்கு வரவேண்டுமெனில், அவர்களுடன் நடத்தப்படும் அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் முக்கியப் பங்காற்றுவது கட்டாயம் என்றும் அவர் கூறினார். முன்னதாக, தாலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கக் கோரி அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP