தீவிரவாதிகளுக்கு புகலிடமாக இருக்கும் பாகிஸ்தான்: அமெரிக்கா அதிருப்தி 

தீவிரவாதிகளுக்கு தகுந்த புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக இருந்து வருவது கவலையடைய செய்வதாக அமெரிக்க வெளியுறவுத் துறை முதன்மை செயல் அதி-கரியான அலைஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
 | 

தீவிரவாதிகளுக்கு புகலிடமாக இருக்கும் பாகிஸ்தான்: அமெரிக்கா அதிருப்தி 

தீவிரவாதிகளுக்கு தகுந்த புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக இருந்து வருவது கவலையடையச் செய்வதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை செயல் அதிகரியான அலைஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார். 

வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அவர், '' தீவிரவாதிகளின் முக்கிய புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது. தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவதை  நிறுத்துவது தான் அவர்களுக்கும் உலக நாடுகளுக்கும் நல்லது. வரும் காலங்களில் பாகிஸ்தானின்புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். 

இன்றளவும் தீவிரவாதிகளின் புகலிடமாகவே பாகிஸ்தான் விளங்குவது வருத்தத்தை அளிக்கிறது. ஆப்கானிஸ்தானில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது. தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்க நாங்கள் ஊக்குவித்து தான் வருகிறோம். அதே சமயம் பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலிபான்களின் முக்கிய பிரிவான ஹக்கானி பாகிஸ்தானில் தான் செயல்படுகிறது. 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசியல் செயல்பாடுகளை உற்றுநோக்கி கவனித்து வருகின்றோம். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும், எல்லைப்பிரச்னை அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்பது போன்ற அவரது கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம்.

அதே போல, ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்காக இந்தியத் தரப்பில் சுமார் ரூ.20,945 கோடி அளவுக்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு வேறு எந்த நாடும் உதவி செய்யவில்லை. அதற்காக இந்தியாவை பாராட்டுகிறேன்'' என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP