தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு: அமெரிக்க உளவுத்துறை

தலிபான், ஹக்கானி போன்ற தீவிரவாத அமைப்புகளை எதிர்த்து பாகிஸ்தான் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்க உளவுத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 | 

சர்வதேச அளவில், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இடமளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த சுமார் 13,000 கோடி ரூபாய் நிதி முடக்கப்பட்டது. தன் நாட்டில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காத துவங்கினால் மட்டுமே, அந்நாட்டிற்கு வழங்கப்படும் ராணுவ உதவிகள் தொடரப்படும் என அமெரிக்க அரசும் நாடாளுமன்றமும் எச்சரித்தது.

இந்நிலையில், அமெரிக்க உளவுத்துறை மூத்த அதிகாரி ஜோசப் வோட்டெல், அமெரிக்க நடவடிக்கைகளையும், சர்வதேச அளவில் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை தொடர்ந்தும், பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP