பாக். பயங்கரவாத நடவடிக்கைகள் முறியடிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு 

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மூலம் இந்தியாவுக்கு தொடர்ந்து தாக்குதல்களும் பாதிப்பும் இருந்து வந்தும் அதனை தொடர்ந்து திறம்பட முறியடித்து வருவதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது.
 | 

பாக். பயங்கரவாத நடவடிக்கைகள் முறியடிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு 

பாகிஸ்தானிலிருந்து இயங்கும் பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை இந்தியா திறம்பட தொடர்ந்து முறியடித்து வருவதாக அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2017 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் பல தாக்குதலையும், தொல்லையும் கொடுத்துள்ளது என்றும் குறிப்பாக காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இந்தியாவின் மத்திய மாநில பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை திறம்பட இந்திய அரசு முறியடித்துள்ளது. 

அதே போல உள்நாட்டில் இயங்கும் மாவோயிஸ்ட், நக்சல்கள் மூலமும் மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனையும் இந்தியா தகுந்த முறையில் கையாண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஜெய்சி இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா அமைப்புகள் மூலம் இந்திய பிராந்தியங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளின் பயங்கரவாத செயல்களை தடுக்க பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017 ஜூன் மாதம் அமெரிக்கா சென்றபோது அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பயங்கரவாத ஒழிப்pu நடவடிக்கையில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது பற்றியும் விவரித்துள்ள அந்த அந்த அறிக்கை, வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த பேக்கரி தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி முகம்மது இட்ரீஸ் என்பவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டது போன்ற பல நடவடிக்கைகளை மேற்கோள்காட்டி பாராட்டு தெரிவித்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP