வான்படை தாக்குதலில் ஒசாமா பின் லேடனின் பேரன் உயிரிழப்பு

கொல்லப்பட்ட அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின் லேடனின் பேரன் ஒசாமா பின் ஹம்சா பின் லேடன்(12) வான்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
 | 

வான்படை தாக்குதலில் ஒசாமா பின் லேடனின் பேரன் உயிரிழப்பு

கொல்லப்பட்ட அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின் லேடனின் பேரன் ஒசாமா பின் ஹம்சா பின் லேடன்(12) வான்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அமெரிக்கா ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் தீவிரவாதி ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டான். ஒசாமாவின் இறப்பிற்கு பின்னர் அவனது மூத்த மகன் ஹம்சா பின் லேடன் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு தலைமறைவாக இருந்து வந்தான். ஹம்சாவின் மகனான 12 வயதுடைய ஒசாமா பின் ஹம்சா பின் லேடன் கடந்த ஆண்டு பாக் - ஆப்கான் எல்லையில் நடைபெற்ற வான்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஹம்சா தனது குடும்பத்தாருக்கு எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. அந்த கடிதத்தில், "நமது மகன் ஒசாமா பின் ஹம்சா சொர்க்கத்திற்கு சென்று விட்டான். இது போன்ற கடினமான சூழ்நிலைகள் தான் நம்மை உறுதி படுத்துகின்றன" என தெரிவித்துள்ளான். ஆனால் அவன் எவ்வாறு இறந்தான் என்பது குறித்து கடிதத்தில் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், அரபி செய்தி நிறுவனம் ஒன்று, கடந்த ஆண்டு பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் ஒசாமா பின் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற தாக்குதலில் அவன் உயிரிழந்துள்ளான். ஒசாமா ஆதரவாளர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தியை பகிர்ந்து துக்கம் அனுசரித்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP