லாஸ் ஏஞ்சல்ஸ் துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி

தன் குடும்பத்தினரைச் சுட்டு, பின்னர் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
 | 

லாஸ் ஏஞ்சல்ஸ் துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி

தன் குடும்பத்தினரைச் சுட்டு, பின்னர் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தன் குடும்பத் தகராறு காரணமாக, தனது பாட்டி மற்றும் காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன் பாட்டியின் காரில் தப்பியோட முயன்ற அந்த நபரை , போலீசார் துரத்திச் சென்றனர். அப்போது அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த அவன் தன்னை துரத்திய பாதுகாவலர்களையும் போலீசாரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

இதனால் கடையில் ஷாப்பிங் செய்தவர்கள் அலறியடித்து ஓடினர். சிலர் ஜன்னல் வழியாக குதித்து தப்பியோடினர். அங்கிருந்த பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, போலீசாரை மிரட்டியுள்ளான். இதற்கிடையில் மார்க்கெட்டில் இருந்த பெண் ஒருவரை, அந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டார். அவரை வெளியே இழுத்து வந்த போலீசார், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார். பின்னர் அதிரடியாக மார்க்கெட்டிற்குள் நுழைந்த போலீசார், அந்த நபரை கைது செய்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP