விஞ்ஞானிகளுக்கு எதிராக எண்ணெய் நாடுகள்; ஐநா-வில் பரபரப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின், சர்வதேச பருவநிலை மாற்ற ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையை, அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து தடுத்துள்ளனர். இது ஐநா-வில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 | 

விஞ்ஞானிகளுக்கு எதிராக எண்ணெய் நாடுகள்; ஐநா-வில் பரபரப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின், சர்வதேச பருவநிலை மாற்ற ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையை, அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து தடுத்துள்ளனர். இது ஐநா-வில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மனித குலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக கருதப்படும் பருவநிலை மாற்றதினால் ஏற்படும் ஆபத்துகள், அதை தடுக்கும் வழிகள் குறித்து IPCC எனப்படும் ஐநாவின் சர்வதேச ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. 2015ம் ஆண்டு, பாரிஸ் பருவநிலை மாற்ற சந்திப்பின் போது, சர்வதேச ஆணையத்திடம் புதிய ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்த நூற்றாண்டின் இறுதியில், புவியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் உயர உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கண்டறியவும் குறிப்பிடப்பட்டது.

தற்போது இந்த ஆய்வின் அறிக்கையை, IPCC சமர்ப்பிக்க முயன்ற போது, அதை அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகள் தடுத்தன. அறிக்கையில், தற்போது புவியில் வெளியிடப்படும் கார்பன் மாசுபாட்டை, 45 சதவீதம் குறைக்க வேண்டும் என்றும், இப்போதைய நிலை நீடித்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் 1.5 டிகிரி செல்சியஸ் அல்ல, 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு புவியின் வெப்பம் உயரும் என்றும் கூறப்பட்டது. இது மிகப்பெரிய அளவில் உலகம் முழுக்க அழிவை ஏற்படுத்தும் எனவும் அந்த அறிக்கை எச்சரித்திருந்தது.

ஆனால், எண்ணெய் வர்த்தகத்திற்கு இந்த அறிக்கை பாதகமாக அமையும் என்பதால், அதை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா, ரஷ்யா, குவைத் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் மறுத்துள்ளன. மற்ற நாடுகள் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடிவுவெடுத்த நிலையில், இந்த நான்கு நாடுகளும் இதை கடுமையாக எதிர்த்தன. இதனால், ஐநா விதிகளின் படி, இந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க முடியாமல் போனது.

ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, பருவநிலை மாற்றம் என ஒன்று கிடையாது என்றும், அது விஞ்ஞானிகள் கிளப்பி விட்ட வதந்தி என்றும், கூறி வருகிறது. எண்ணெய் வளம் கொண்ட நாடுகளான சவுதி மற்றும் குவைத், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக முதலில் கூறியிருந்த நிலையில், தற்போது பின்வாங்கியுள்ளன. 

4 நாடுகளின் முடிவு, மற்ற உறுப்பினர் நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக நிற்கும் நாடுகள் மிகவும் மோசமானவை என்றும், எண்ணை வளம் கொண்ட நாடுகள், தங்கள் சுயலாபத்திற்காக அப்பாவி மக்களின் வாழ்வில் விளையாடுகிறார்கள், என்றும் பல நாட்டு பிரதிநிதிகளும், விஞ்ஞானிகளும் காட்டமாக பேசினர். 

சவுதி, குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தான், பருவநிலை மாற்றத்தால் முதலில் பாதிக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP