ஒபாமா, க்ளிண்டனுக்கு வெடிகுண்டு அனுப்பிய உள்நாட்டு தீவிரவாதி கைது!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், சிஎன்என் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் பைப் வெடிகுண்டுகளை அனுப்பிய விவகாரத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

சில தினங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸுக்கு வெடிகுண்டு பார்சல் ஒன்று அனுப்பப்பட்டது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களுக்கு கணிசமான அளவு நன்கொடை வழங்கும் சோரோஸை, அதிபர் ட்ரம்ப்பின் குடியரசு கட்சியை சேர்ந்த ஒருவர் குறிவைத்து இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அதிபர் ஒபாமா, அதிபர் வேட்பாளர் ஹிலாரி க்ளினிடன், சிஎன்என் செய்தி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பைப் வெடிகுண்டுகளை கொண்ட பார்சல்கள் அனுப்பப்பட்டன. 

இதுகுறித்து அமெரிக்க புலனாய்வுத் துறை எஃப்.பி.ஐ விசாரித்து வந்த நிலையில், அனைத்து வெடிகுண்டுகளையும் ஒரே ஆள் அனுப்பியதாக தெரிவித்தனர். இது உள்நாட்டு தீவிரவாத செயல் எனவும் தெரிவித்தனர். 

அனைத்து குண்டுகளும் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரே பகுதியில் இருந்து சென்றதாக தெரிய வந்த நிலையில், இன்று ஒருவரை எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர் 56 வயதான  சீசர் சையோக் என தெரிய வந்துள்ளது. அவர் பயன்படுத்தி வந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ட்ரம்ப் மற்றும் அவரது குடியரசு கட்சியின் ஸ்டிக்கர்கள் பல ஒட்டப்பட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP