கொலைகாரர்கள் கையில் அணு ஆயுதமா?: ஈரான் குறித்து ட்ரம்ப் தாக்கு

தீவிரவாத ஆதரவு உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவதை நிறுத்தும்வரை ஈரானை, அணுஆயுதங்களை நெருங்கவிடக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசினார்.
 | 

கொலைகாரர்கள் கையில் அணு ஆயுதமா?: ஈரான் குறித்து ட்ரம்ப் தாக்கு

கொலைகாரர்கள் கையில் அணு ஆயுதமா?: ஈரான் குறித்து ட்ரம்ப் தாக்குதீவிரவாத ஆதரவு உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவதை நிறுத்தும்வரை ஈரான், அணுஆயுதங்களை நெருங்க விடக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசினார். 

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்ஜலா மெர்கல் உடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அப்போது, "மத்திய கிழக்கு நாடுகளில் எந்த மூலையில் பிரச்னை என்றாலும் அதற்கு ஈரானின் தலையீடு தான் காரணமாக உள்ளது. அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஆபத்தான ஏவுகணைகளை தயாரிப்பது, தீவிரவாதத்துக்கு துணைப் போவது ஆகியவற்றை நிறுத்தும்வரை, ஈரான் நாட்டின் கொலைகார ஆட்சியாளர்கள் அணு ஆயுதங்களை நெருங்கி  விடாதவாறு நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

 சிரியாவில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முழுவதுமாக அகற்றி எறிய அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு உறுதி பூண்டுள்ளது. ஆனால், இந்த வெற்றியை ஈரான் தனக்கு சாதகமாக்கி கொள்ளாத வகையில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். சிரியா மற்றும் லெபனானில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் ஈரானின் திட்டங்களை தடுத்து, தகர்க்க வேண்டும் என்னும் ஜெர்மனியின் பார்வைக்கு நாமும் துணையாக இருக்கிறோம்.

கொலைகாரர்கள் கையில் அணு ஆயுதமா?: ஈரான் குறித்து ட்ரம்ப் தாக்கு

மத்திய கிழக்கு நாடுகளில் வன்முறையையும், ரத்தக்களறியையும், குழப்பங்களையும் ஏற்படுத்திவரும் ஈரான் நாட்டின் ஆட்சியாளர்களைப் பற்றி இன்றைய சந்திப்பின்போது நானும் ஜெர்மன் பிரதமருடன் விரிவாக ஆலோசித்தேன். ஈரானுக்கு எதிராக ராணுவ பலத்தை அமெரிக்கா பயன்படுத்துமா? என்று தற்போது பேசுவது பொருத்தமாக இருக்காது. ஆனால், அவர்கள் அணு ஆயுதங்களை தயாரிக்க கூடாது" என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ஆனால், இதற்கு ஈரான் தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஸாரீஃப் கூறும்போது, "அணு சக்தி ஒப்பந்த விதிகளை ஈரான் மீறாது. அதேநேரம் அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறினாலோ, மற்ற நாடுகள் அதிலிருந்து விலகினாலோ அந்த நாடு வருத்தப்பட நேரிடும். அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு ஈரான் அடிபணியாது" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP