ஃபேஸ்புக் மட்டுமில்ல கூகுளும் திருடுது! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டு காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் கூகுள் நிறுவனம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஃபேஸ்புக் மட்டுமில்ல கூகுளும் திருடுது! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஃபேஸ்புக் மட்டுமில்ல கூகுளும் திருடுது! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டு காரணமாக பல்வேறு பிரச்சனைகளை ஃபேஸ்புக் சந்தித்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனங்கள் சமூக வலைத்தள பயனாளர்களின் தகவல்களை திருடி, தேர்தல் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஃபேஸ்புக் நிறுவனம் மட்டுமின்றி கூகுள் நிறுவனத்திடமும் பயனாளர்களின் தகவல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வின் முடிவில், கூகுள், தன் பயனர்கள் செல்லும் இடங்கள், ஒவ்வொரு இடங்களுக்கும் செல்ல எடுத்துக் கொண்ட நேரம், பொழுதுபோக்கு விபரங்கள், விருப்பங்கள், உடல் எடை, வருமானம், செயலிகளில் உள்ள தகவல்கள், அழிக்கப்பட்ட தரவுகள் உள்ளிட்டவற்றை சேகரித்து வைத்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நொடியும் பல கோடி பேர் பயன்படுத்தும் கூகுள் சேவையில், அனைவரின் தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் மட்டுமின்றி வேறு எந்தெந்த நிறுவனங்கள் இதுபோன்ற தகவல் திருட்டு வேலைகளில் ஈடுபடுகின்றன என்பதை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களை அவர்களுக்கு எளிதாக வழங்கும் நோக்கில் கூகுள் ப்ரைவசி திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மை அக்கவுண்ட் (My Account) போன்ற ஆப்ஷன்கள் மூலம், பயனர்களின் தகவல்கள் மற்றும் அவர்கள் பார்த்த இணைய பதிவுகளின் தடங்கள் (Tracking History) உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் டிராக்கிங் வழிமுறைகளை ஆஃப் செய்யவும், அவற்றை அழிக்கவும் முடியும். இதனை பயன்படுத்துமாறு கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கூகுள் உங்களிடம் இருந்து திருடும் தகவல்கள்

ஸ்மார்ட்போனில் கூகுள் சேவையை பயன்படுத்த துவங்கியது முதல் நீங்கள் சென்ற இடங்களின் முழு மேப் தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவற்றுடன் பார்க்க முடியும்.

  1. கூகுள் தேடல்களின் விவரங்கள்
  2. உங்களின் விளம்பர ப்ரோஃபைல்
  3. நீங்கள் பயன்படுத்தும் ஆப் (app) பெயர்
  4.  யூடியூப் ஹிஸ்ட்ரி

உண்மையில், கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்டவை வெகு காலமாக நம்முடைய தகவலை, நம்மைப் பற்றிய விவரங்களை எல்லாம் திருடிக்கொண்டுதான் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நம்மை ரகசியமாக கண்காணிக்கின்றன. ஏன் அரசே கூட கண்காணிக்கிறது. இன்றைக்கு மிகப்பெரிய அளவில் ஆன்லைன் பிசினஸ் நடக்கிறது என்றால் அதற்கு இந்த திருட்டுக்கள்தான் காரணம். இன்றைக்கு, சில அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்துக்காக இந்த திருட்டை ஏதோ இன்று நடப்பதுபோல பேசுவதுதான் வேடிக்கையாக உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP