அண்ணனை கொல்ல உத்தரவிட்டார் வடகொரிய அதிபர் கிம்: அமெரிக்க உளவுத்துறை குற்றச்சாட்டு

வட கொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் இல் ரசாயன ஆயுதம் கொண்டு கொல்லப்பட்டதாக கிம் ஜோங் ஊன் மீது அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளது.
 | 

அண்ணனை கொல்ல உத்தரவிட்டார் வடகொரிய அதிபர் கிம்: அமெரிக்க உளவுத்துறை குற்றச்சாட்டு

அண்ணனை கொல்ல உத்தரவிட்டார் வடகொரிய அதிபர் கிம்: அமெரிக்க உளவுத்துறை குற்றச்சாட்டுவடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம் ரசாயன ஆயுதம் கொண்டு கொல்லப்பட்டதாக கிம் ஜோங் ஊன் மீது அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளது. 

முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல் கடந்த 2011-ம் ஆண்டு காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, வடகொரியாவின் அதிபர் பதவிக்கு கிம் ஜாங் இல்லின் வாரிசுகளான கிம் ஜாங் நம்முக்கும், ஜிம் ஜாங் உன்னுக்கும் கடுமையான போட்டி நிலவியது. 

இதையடுத்து, ராணுவத்தின் உதவியுடன் அந்நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக, வடகொரியாவிலிருந்து கிம் ஜாங் நம் வெளியேறினார்.

இந்த சூழலில், திடீரென கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் ஜாங் நம் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி மர்மமாக இறந்து கிடந்தார்.

இந்நிலையில், அவரை வி.எக்ஸ் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தி வடகொரியா கொலை செய்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சர்வதேச விதிகளை மீறிய வடகொரியா மீது புதிய தடைகளை விதித்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஹேதர் நவுரட் தெரிவித்தார். கிம் ஜாங் நம் கொலை குறித்து அமெரிக்க உளவுத்துறை சிஐஏ மேற்கொண்ட விசாரணையில், இந்தத் தகவல்கள் தெரியவந்திருப்பதாக ஹேதர் நவுரட் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP