மரணபயத்தினால் கூடுதல் பாதுகாப்புடன் களமிறங்கும் வடகொரிய அதிபர்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின் போது தான் கொலை செய்யப்படலாம், எனவே கூடுதல்பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 | 

மரணபயத்தினால் கூடுதல் பாதுகாப்புடன் களமிறங்கும் வடகொரிய அதிபர்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின் போது தான் கொலை செய்யப்படலாம், எனவே கூடுதல்பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு வருகிற ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருக்கிறது. இந்த சந்திப்பை உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் செண்டோசா தீவில் உள்ள புகழ்பெற்ற கேபெல்லா ஹோட்டலில் உள்ளூர் நேரப்படி சரியாக காலை 9 மணிக்கு சந்திக்க இருக்கின்றனர். அதிபர்களின் சந்திப்பு நடைபெறுவதையொட்டி, சிங்கப்பூரில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

சமீபத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்காவில் டிரம்ப்பை சந்தித்து பேசினார். சந்திப்பினை அடுத்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் டிரம்ப், "இந்த சந்திப்பு சமூகமாக முடியும் என்று நம்புகிறேன். இதன்மூலமாக கொரியப்போர் முடிவுக்கு வரும். முதற்கட்டமாக அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக இந்த பேச்சுவார்த்தை இருக்கும் என நினைக்கிறன் வடகொரிய அதிபருடனான இந்த சந்திப்பு வெற்றி பெறும் பட்சத்தில், அவரை அமெரிக்காவுக்கு அழைப்பேன்" என தெரிவித்திருந்தார். 

முன்னதாக, கடந்த வருடம் கிம் ஜாங் உன்னை படுகொலை செய்துவிட்டு அவரது சகோதரர் ஆன கிம் ஜாங் நம்-மை வடகொரிய அதிபராக்க சீனா முயற்சித்தது. ஆனால் இதில், கிம் ஜாங் நம் தான் படுகொலை செய்யப்பட்டார். மலேசியா விமான நிலையத்தில் நடந்த இந்த படுகொலை உலக நாடுகளை அதிரச் செய்தது. இந்த சம்பவத்தினால், கிம் ஜோங் மரண பயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தென்கொரியா - சீனா - அமெரிக்க நாடுகள் இணைந்து ஏதேனும் சாதி செய்ய வாய்ப்பிருப்பதால் கிம் ஜோங் தனது படையை பலப்படுத்தியுள்ளார். மேலும், சிங்கப்பூர் வரும்போது கூடுதல் பாதுகாப்புடன் அவர் வருவார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP