எச்சரிக்கையை மீறி வட கொரியா ஏவுகணை சோதனை: அமெரிக்கா உளவு அமைப்பு

அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் புதிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 | 

எச்சரிக்கையை மீறி வட கொரியா ஏவுகணை சோதனை: அமெரிக்கா உளவு அமைப்பு

புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கட்டமைக்கும் பணியில் வட கொரியா ஈடுபட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

 வடகொரியா அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தியதை அடுத்து, அமெரிக்காவும், ஐ.நாவும் அந்நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்திருந்தன.

இதையடுத்து அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவானது.  இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை முற்றிலும் அழிப்பதாக வடகொரியா ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்படி அந்நாடு செய்யும் நிலையில், படிப்படியாக பொருளாதார தடைகளை நீக்குவது குறித்து பேசுவதாக அமெரிக்கா தெரிவித்தது. 

இருப்பினும் வட கொரியாவை அமெரிக்க உளவு செயற்கைகோள்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தன.  இடையே, அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் செறிவூட்டப்பட்டும் பணி அங்கு நிறுத்தப்படவில்லை என அவ்வப்போது தகவல்கள் வெளியாகின. 

எனவே அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்படும் வரை வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.  எனினும், இந்த எச்சரிக்கையும் மீறி வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகள் தயாரிப்பதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.  

கடந்த வாராம் கூட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, வடகொரியா இன்னும் தொடர்ந்து அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று குற்றச்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP