அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த வடகொரியா சம்மதம்!

அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தும் நோக்கத்தோடு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம் தெரிவித்திருப்பதாக தென்கொரியா அறிவித்திருக்கிறது.
 | 

அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த வடகொரியா சம்மதம்!

அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த வடகொரியா சம்மதம்!அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தும் நோக்கத்தோடு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம் தெரிவித்திருப்பதாக தென்கொரியா அறிவித்திருக்கிறது.

தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் பங்கேற்றதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் சுமூக உறவு ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, நேற்று தென்கொரியாவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் வடகொரியாவிற்குச் சென்று அதிபர் கிம் ஜாங் ஊன்னை சந்தித்தனர்.

தென்கொரியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சங் உய் யோங் தலைமையிலான பேராளர்கள், கிம் ஜோங் உன் மற்றும் அவரது மனைவியுடன் விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், வடகொரியா வாஷிங்டன்னுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு, அணு ஆயுதச் சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக சங் உய் யோங் தெரிவித்திருக்கிறார்.

இதனை அறிந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “சரி.. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP