அணுஆயுத சோதனையை முற்றிலும் கைவிட வடகொரியா ஒப்புதல்

அணுஆயுத சோதனையை முற்றிலும் கைவிட வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒப்புதல் அளித்துள்ளார்.
 | 

அணுஆயுத சோதனையை முற்றிலும் கைவிட வடகொரியா ஒப்புதல்

அணுஆயுத சோதனையை முற்றிலும் கைவிட வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒப்புதல் அளித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு இன்று சிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள புகழ்பெற்ற கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்றது. இருவரும் வந்தவுடன் புன்னகையுடன் கைகுலுக்கிக்கொண்டனர். அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை குறித்து 45 நிமிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பால்கனியில் நின்று இருவரும் சேர்ந்து கையசைத்தனர். தொடர்ந்து நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அணுஆயுத சோதனையை முற்றிலும் கைவிட வடகொரியா ஒப்புதல்

பின்னர் பேசிய டிரம்ப், "சந்திப்பு மிகவும் திருப்தியாக இருந்தது. இந்த சந்திப்பில் பங்குபெற்றதை நினைத்து பெருமைப்படுகிறேன். மேலும் வடகொரியா உடனான இந்த ஒப்பந்தத்தை அடுத்து, ஒரு புதிய பாதுகாப்பான சூழ்நிலை உருவாகும். இருவரும் சேர்ந்து ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குவோம். உலக நாடுகளுக்கு வரக்கூடிய பிரச்னைகளை சேர்ந்து எதிர்கொள்வோம்" என்றார்.  அதையடுத்து வடகொரிய அதிபரும், 'அணுஆயுத சோதனையை முழுவதுமாக கைவிட பணியைத் தொடங்குகிறோம்" என தெரிவித்துள்ளார். 

டிரம்ப் - கிம் சந்திப்பு உலக நாடுகளிடையேயும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகள் மற்றும் ஐ.நா எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனையை நடத்திவந்த வடகொரியா தற்போது அணுஆயுத சோதனையை முற்றிலுமாக கைவிட ஒப்புதல் அளித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இரு நாட்டு அதிபர்களின் இந்த சந்திப்பை வடகொரிய ஊடகங்கள் உடனுக்குடன் ஒளிபரப்பியுள்ளன. முன்னதாக கிம் ஜோங், சீனா மற்றும் தென்கொரியா சென்றுவந்த பின்னரே ஊடகங்களில் தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP