அணுஆயுதங்கள் இடம்பெறாத அணிவகுப்பு: கிம் ஜாங்குக்கு ட்ரம்ப் பாராட்டு 

வடகொரியா, அந்த நாட்டின் 70வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ராணுவ அணிவகுப்பை அணுஆயுதங்களை ஏந்தாமல் நடத்தப்பட்டுள்ளது. இது, வடகொரியாவிடமிருந்து வெளிப்படும் நேர்மறையான விஷயம் என்று ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 | 

அணுஆயுதங்கள் இடம்பெறாத அணிவகுப்பு: கிம் ஜாங்குக்கு ட்ரம்ப் பாராட்டு 

ஏவுகணைகள் இடம்பெறாத வட கோரிய ராணுவ அணிவகுப்பு நிகழ்வை குறிப்பிட்டு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்குக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்து 1948ம் ஆண்டு விடுதலை பெற்றது கொரியா. இதை தொடர்ந்து வடகொரியா, தென் கொரியா என இரண்டு நாடுகளாக பிரிந்தன.  வடகொரியாவில் கிம் இல் சுங் தலைமையில் புதிய ஆட்சி தோன்றிய ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். 

அதையொட்டி, அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் ராணுவ அணிவகுப்பு மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அணிவகுப்பில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளிட்ட மிரட்டாலான விஷயங்கள் இடம்பெறும். இதனிடையே, அணுஆயுத  பயன்பாட்டை கைவிடுவதாக கிம் ட்ரம்ப்பை சந்தித்து கூறி ஒப்பந்தம் மேற்கொண்டார். இதனால் இரு நாடுகளுக்குள் இணக்கமான சூழல் ஏற்படும் நிலை உருவானது. 

இதனால் இந்த ஆண்டு நடைபெற்ற வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால், அணி வகுப்பின்போது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. ஆயுதங்கள் மட்டுமே ஏந்தி வீரர்கள் அணிவகுப்பை நடத்தினர். 

அணுஆயுதங்கள் இடம்பெறாத அணிவகுப்பு: கிம் ஜாங்குக்கு ட்ரம்ப் பாராட்டு 

இந்த நிலையில் ஏவுகணைகள் இல்லாத வட கொரியாவின் ராணுவ அணிவகுப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டர் குறிப்பிட்டு பதிவு செய்துள்ள ட்ரம்ப், ''வடகொரியா, அந்த நாட்டின் 70வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ராணுவ அணிவகுப்பை அணுஆயுதங்களை ஏந்தாமல் நடத்தப்பட்டுள்ளது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னிருத்துவதாக அது இருந்தது. இது, வடகொரியாவிடமிருந்து வெளிப்படும் நேர்மறையான விஷயம். மிகப் பெரும் விஷயம். வரவேற்கத்தக்கது.  நன்றி கிம் ஜாங். நம் இருவருக்கும் மத்தியில் மோதல் ஏற்படும் என்று நினைத்த அனைவரின் எண்ணமும் தவறு என்று நாம் இருவரும் இணைந்து நிரூபிப்போம்''  என்று குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP