அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு நோபல் பரிசு?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைக்கடிதம் ஒன்று நார்வே நோபல் பரிசு தேர்வு இயக்குநகரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த கடிதம் போலியானது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப்பிற்கு நோபல் பரிசு?

அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப்பிற்கு நோபல் பரிசு?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைக்கடிதம் ஒன்று நார்வே நோபல் பரிசு தேர்வு இயக்குநகரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை செய்ததில் இந்த கடிதம் போலியானது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நார்வேயில் உள்ள நோபல் பரிசு இயக்குனரகம் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய துறைகளில் சாதனை புரிந்தோரை தேர்தெடுத்து நோபல் பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிறகு நோபல் பரிசு வழங்க வேண்டும் என நார்வே இயக்குநகரத்துக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து நார்வே நோபல் பரிசு தேர்வு மைய இயக்குனர் தெரிவிக்கையில், "டிரம்ப்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என ஒரு பரிந்துரைக்கடிதம் வந்தது உண்மை தான். ஆனால் விசாரித்ததில் அந்த கடிதம் போலியானது என தெரிய வந்துள்ளது. யார் இதை வெளியிட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையின் முழு விசாரணைக்கு பிறகே எங்களால் ஏதும் கூற முடியும். 

ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசுக்கான  பரிந்துரைக் கடிதம், அந்த ஆண்டின் ஜனவரி மாதம் 31ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும். அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏற்கெனவே நோபல் பரிசு பெற்றவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் குறைந்தது அடுத்த 50 ஆண்டுகளுக்கு ரகசியமாகப் பாதுகாக்கப்படும். பரிந்துரைக்கப்பட்டவர் விரும்பினால் மட்டுமே அந்த தகவல் வெளியிடப்படும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP