அமெரிக்காவிடம் யாரும் கெஞ்சவில்லை: வட கொரியா சாடல்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் நாடு கெஞ்சவில்லை என்றும் லிபியாவுடன் ஒப்பிட்டு அமெரிக்க துணை அதிபர் தன்னை முட்டாள் என நிரூபித்துவிட்டார் என்றும் வட கொரியா கண்டித்துள்ளது.
 | 

அமெரிக்காவிடம் யாரும் கெஞ்சவில்லை: வட கொரியா சாடல்

அமெரிக்காவிடம் யாரும் கெஞ்சவில்லை: வட கொரியா சாடல்அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் நாடு கெஞ்சவில்லை என்றும் லிபியாவுடன் ஒப்பிட்டு அமெரிக்க துணை அதிபர் தன்னை முட்டாள் என நிரூபித்துவிட்டார் என்றும் வட கொரியா கண்டித்துள்ளது.

வடகொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோ சான் ஹுய் தனது அறிக்கையில் மைக் பென்ஸ் சுய கட்டுப்பாடின்றி ஆணவமான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "பேச்சுவார்த்தைக்காக தாங்கள் அமெரிக்காவை கெஞ்சப் போவதில்லை. எங்களது நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா நடந்துகொண்டால் பேச்சுவார்த்தையை மறுபரிசீலனை செய்ய எங்கள் தலைமைக்கு பரிந்துரைப்போம். லிபியாவுடன் எங்களது நாட்டை ஒப்பிட்டு அமெரிக்க துணை அதிபர் தனது முட்டாள்தனத்தையும் அறியாமையையும் நிரூபித்துவிட்டார். " என்று வட கொரிய தரப்பு சாடியதாக கேசிஎன்ஏ தகவல் வெளியிட்டது.

சமீபத்தில், மைக் பென்ஸ் தனது பேட்டியில், பேச்சுவார்த்தை விவகாரத்தில் வடகொரியா அமெரிக்காவுடன் ஏதேனும் விளையாட நினைத்தால் அது பெரும் தவறாக முடியும் என்றும் வடகொரியாவுக்கு லிபியாவின் முடிவு ஏற்படும் என்றும் எச்சரித்தார். கடாஃபியைப் போன்று கிம் ஜோங் உன்னும் கொல்லப்படுவார் என்றும் அவர் கூறினார். இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவும், வடகொரியாவும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநிலைச் சந்திப்பு குறித்த சர்வதேச நாடுகள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சில வாரங்களாக அமெரிக்கா - வட கொரியா இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது. இதனால் இருதரப்பும் இந்தச் சந்திப்பை ரத்துசெய்யலாம் என்ற சந்தேகங்களை எழுப்புகின்றன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP