ஆட்சியில் ஜனநாயகம் வேண்டாமா?- இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை 

இலங்கையில் ரனில் விக்ரமசிங்கேயிடமிருந்து பிரதமர் பதவி பறிக்கப்பட்டு ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள சூழலில் அனைத்துக் கட்சிகளும் அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
 | 

ஆட்சியில் ஜனநாயகம் வேண்டாமா?- இலங்கைக்கு அமெரிக்கா  அறிவுரை 

இலங்கையில் உள்ள அனைத்துக்  கட்சிகளும் அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது 

இலங்கையில் சிறிசேனாவின் சுதந்திரா கட்சியும் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை 2015-ம் ஆண்டு அமைத்தன. அதன்படி பிரதமராக ரனில் விக்ரமசிங்கேயும் அதிபராக சிறிசேனாவும் பதவியேற்றனர்.  ஆனால் சமீப காலமாக இருப் பிரிவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவியது. 

சில மாதங்களுக்கு முன்னர் கண்டியில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடமிருந்து சட்டம்-ஒழுங்கு துறையை பறிக்கப்பட்டது.  பிறகு சில மாதங்கள் முன்பு விக்ரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சிறிசேனா ஆதரவு எம்.பி.க்கள் ஆதரித்தது பெரிய விரிசலை ஏற்படுத்தியது. 

இத்தகைய அரசியல் சூழலில், நேற்று இரவு திடீரென இலங்கை கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக சிறிசேனா தலைமையிலான சுதந்திரா கட்சி அறிவித்தது. தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை சிறிசேனா நீக்கி, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். இலங்கை அரசியலில் நிலவும் இந்தக் குழப்பம் சர்வதேச அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளும், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டியது அவசியம். வன்முறையை தவிர்த்து ஜெனிவாவில் அளித்த வாக்குறுதி அளித்ததை காப்பற்றும் வகையில் மனித உரிமைகள், சீர்திருத்த நடவடிக்கை, சமூக நீதி ஆகியவற்றையும் இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அதனை நிலைநாட்டுவதை உறுதி செய்து, ஆட்சியில் ஜனநாயகத்தை காப்பாற்றுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தொடர்புடையவை: இலங்கையில் இரட்டை பிரதமர்கள்... சீனாவின் சதிராட்டத்தால் பலமிழந்த இந்தியா..!  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP