வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க் விமான நிலையம்

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் குழாய் உடைந்து வெள்ளம் ஏற்பட்டதனால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 | 

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ஜான் எப்.கென்னடி விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடியது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில், விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில், தீயணைப்பு தடுப்பு சாதனத்திற்கு தண்ணீர் செல்லும் குழாய் உடைந்துள்ளது. இதனால் அந்த முனையத்தில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

பெரும்பாலான சர்வதேச விமானங்கள் வந்திறங்கும் பகுதி என்பதால் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.   பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. அந்த பகுதியில் உள்ள பயணிகள் வேறு முனையத்திற்கு மாற்றப்பட்டனர். பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் விமானத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP