செவ்வாயில் இறங்கும் 'இன்சைட்'- நேரலையில் ஒளிபரப்பும் நாசா

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'இன்சைட்' விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் திங்கள்கிழமை தரையிறங்கும் நிகழ்வை அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் பொதுமக்களுக்காக நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.
 | 

செவ்வாயில் இறங்கும் 'இன்சைட்'- நேரலையில் ஒளிபரப்பும் நாசா

'இன்சைட்' விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கும் நிகழ்வை அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் நாசா நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. 

செவ்வாய் கிரகத்தை ஆழமாக ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள 'இன்சைட்' எனும் விண்கலம் நாளை தரையிறங்குகிறது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழுவதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு க்ரியூயாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் செவ்வாயின் உள்பகுதிகளை ஆழமாக ஆய்வு செய்வதற்காக 'இன்சைட்' என்ற விண்கலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கலிஃபோர்னியா நகரிலிருந்து செலுத்தப்பட்டது. சுமார் 48 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ள இந்த விண்கலம் அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தரையிறங்குகிறது. சுமார் 8 நிமிடத்தில் செவ்வாயில் கால்பதிக்கும் விண்கலம், தரையில் துளையிட்டு உட்புற வெப்பநிலை குறித்து ஆய்வு செய்கிறது.

இதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் திரவங்கள் ஏதும் உள்ளதா அல்லது திடநிலையில் உள்ளதா என தெரிய வரும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் முடிவில் செவ்வாயில் தண்ணீர் உள்ளாதா என அறியப்பட்ட உடன் அடுத்து ஓராண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப ஏற்பாடு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைம் சதுக்கத்தில் நேரலை 

சுமார் 5000 கோடி ரூபாய் செலவில் தயாரான 'இன்சைட்' செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் நிகழ்வை நாசா அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.  தரையிறங்க சுமார் 6 நிமிடம் 3 நொடிகள் ஆகலாம் என யூகிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சுவாரஸ்யமான மற்றும் விண்வெளி ஆய்வில் அடுத்தகட்ட முயற்சிக்கு படியாய் அமையப் போகும் பரபரப்பான சூழல் நேரலையில் ஒளிபரப்பாவது சர்வதேச அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP