அமெரிக்காவில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நிர்வாண ஊர்வலம்!

பாலின சமத்துவத்தை பேண வலியுறுத்தி அமெரிக்க பெண்கள் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக ஊர்வலமாக சென்றனர். வெகுவான கவன ஈர்ப்பை கொள்ள Go Topless Day என்ற தினமும் கடைபிடிக்கப்பட்டது.
 | 

அமெரிக்காவில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நிர்வாண ஊர்வலம்!

பாலின சமத்துவத்தை பேண வலியுறுத்தி அமெரிக்க பெண்கள் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக ஊர்வலமாக சென்றனர். வெகுவான கவன ஈர்ப்பை கொள்ள Go Topless Day என்ற தினமும் கடைபிடிக்கப்பட்டது. 

பாலின சமத்துவத்துவத்தை முன்னிலைப்படுத்தி போராடும் விதமாக அமெரிக்க வீதிகளில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள், குடும்பங்களாகவும் பங்கேற்றனர். சமத்துவத்தை வலியுறுத்தி ஆகஸ்டு 26-ஆம் தேதி அமெரிக்காவில் 'Topless day'என்னும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்த தானம் ஜெர்மனி, கனடா, சிலி, கொலம்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

பெண்ணின் உடல் குறித்த ஒருமித்த தவறான பார்வையை இந்த சமூகம் கொண்டுள்ளது. அதனை தகர்த்து உடலை பாகுபாட்டோடு எண்ணக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்தப் பயணம் என இதில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்.  இந்த பேரணியில் 'பெண்கள் உடல் பாவமில்லை'என்பதான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் எந்தப்பட்டன. பெண்களின் உடலை பிரதிபலிக்கும் பலூன்களும் பறக்கவிடப்பட்டன. 

1992-ஆம் வருடம் நியூயார்க்கில் பெண்கள் சட்டையின்றி வெளியில் செல்லலாம் என்று சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் தினம் வெற்றி நாளாக ஒவ்வொரு வருடமும் அங்கு கொண்டாடப்படுகிறது. ஆனால் மற்ற அமெரிக்க நகரங்களிலும் மாகாணங்களிலும் இன்றும் இதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த பேரணிக்கு மட்டும் அங்கு அனுமதி வழங்கக்கப்டுகிறது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP