டிரம்ப்பின் மருமகளுக்கு வந்த மர்ம பார்சல்..

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகள் தனக்கு வந்த பார்சலை திறந்து பார்த்ததும் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 | 

டிரம்ப்பின் மருமகளுக்கு வந்த மர்ம பார்சல்..


அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகள் தனக்கு வந்த பார்சலை திறந்ததில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் ஜூனியர், இவரது மனைவி வெனீசா டிரம்ப். இவரது வீட்டிற்கு வந்த ஒரு கடிதத்தை பிரித்து பார்த்ததும் அந்த இடத்திலேயே வெனீசா மயக்கமடைந்துள்ளார். தொடர்ந்து அவரது வீட்டில் இருந்த அவரது தாயார் உள்பட இருவரும் மயக்கமடைந்தனர். இதனையடுத்து வெனீசா மற்றும் மயக்கமடைந்த இருவரும் நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பார்சலில் வந்து ஆந்த்ராக்ஸ் எனும் வேதிப்பவுடராக இருக்கலாம் என கூறப்படுகிறது. பார்சல் யாரிடம் இருந்து வந்தது? அதில் என்ன இருந்தது? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP