கிம் உடனான சந்திப்பு நல்ல விதமாக இல்லையேல் வெளிநடப்பு செய்வேன்: ட்ரம்ப்

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 | 

கிம் உடனான சந்திப்பு நல்ல விதமாக இல்லையேல் வெளிநடப்பு செய்வேன்: ட்ரம்ப்

கிம் உடனான சந்திப்பு நல்ல விதமாக இல்லையேல் வெளிநடப்பு செய்வேன்: ட்ரம்ப்வட கொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவுடன் உடன்பாடு ஏற்பட்டால், அணு ஆயுதத்தை கைவிடத் தயார் என்று வட கொரியா ஏற்கெனவே அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், புளோரிடாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு ட்ரம்ப், "வடகொரிய  தலைவர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமையாது என்று நாங்கள் நினைக்கவில்லை. 

இந்த ஆலோசனை பயனுள்ள வகையில் இருக்காது என்று நாங்கள் கருதினால், சந்திப்புக்கு போகப்போவது இல்லை. சந்திப்பு திருப்திகரமாக இல்லாவிட்டால்,  உடனடியாக வெளிநடப்பு செய்துவிடுவேன்.  அதோடு, வடகொரியாவுக்கு எதிராக என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதை தொடர்ந்து செய்வோம்" என்றார். 

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இதுவரை 6 முறை அணுகுண்டுகளை சோதித்து உள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு நகரையும் தாக்கும் வல்லமை வாய்ந்த ஏவுகணைகளையும் அந்த நாடு பரிசோதித்து உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும், வார்த்தை யுத்தமும் அவ்வப்போது நிலவி வந்தது. இதனால் வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.  ஐ.நா. சபையும் பொருளாதார தடைகளை விதிக்க வைத்தது. இந்தக் காரணங்களால் இரு நாடுகள் இடையே போர் மூளும் நிலை கூட உருவானது.

ஆனால் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், வடகொரியாவின் நிலைப்பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கின. பின்னர் தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை வடகொரியா கடைப்பிடிக்க தொடங்கியது. இரு நாட்டுத்தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேச உள்ளனர். அதுமட்டுமின்றி, வடகொரியாவுக்காக அமெரிக்காவிடம் தென்கொரியா தூது போனது. 

அதன் எதிரொலியாக, அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் விருப்பம் தெரிவித்தார். அதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் தென்கொரியா தெரிவித்தது. ட்ரம்பும் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார் என கடந்த மாதம் அறிவித்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 18 ஆண்டுகளில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கப்போவது இதுவே முதல் முறை ஆகும்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP