அருங்காட்சியகமான அதிபர் மாளிகை: மெக்சிகோ புதிய அதிபர் அதிரடி சீர்திருத்தம்

மெக்சிகோ அதிபர் மாளிகையை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட்டு அதிபராக பதவியேற்ற முதல் பல சீர்திருத்த நடவடிக்கைகளை ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் அறிவித்துள்ளார். தனது ஊதியத்தையும் 60 சதவீதமாக குறைத்துக்கொண்டுள்ளார்.
 | 

அருங்காட்சியகமான அதிபர் மாளிகை: மெக்சிகோ புதிய அதிபர் அதிரடி சீர்திருத்தம்

மெக்சிகோ அதிபர் மாளிகையை அருங்காட்சியகமாக பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட்டு அதிபராக பதவியேற்ற முதல் நாளே பல சீர்திருத்த நடவடிக்கைகளை தன்னிலைப்படுத்தி ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் அறிவித்துள்ளார். 

மெக்சிகோவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் வெற்றி பெற்றார். இதற்கு முன்பு இரண்டு முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்டாலும் அவர் தோல்வியையே தழுவினார். தலைநகர் மெக்சிகோ சிட்டியின் மேயராகவும் ஆண்ட்ரேஸ் பதவி வகித்துள்ளார்.

இதனிடையே சனிக்கிழமை அதிபராக பதவியேற்ற லோபஸ் அதன்பின், அதிபர் மாளிகையை மக்கள் பார்வைக்காக திறக்க உத்தரவிட்டார். அதோடு தான் அந்த மாளிகையில் வசிக்கப்போவதில்லை என்றும் அதே போல அதிபருக்கான சொகுசு விமானத்தையும் ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தார். மேலும், அதிபருக்கு வழங்கப்படும் ஊதியம் 60% குறைக்கப்படும் என்றும் இது போன்ற சொகுசு விஷயங்களை தவிர்க்க அவர் அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளார். 

அதிபர் மாளிகை திறந்துவிடப்பட்டது முதல் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் அதனை சுற்றிப்பார்க்க வருகின்றனர். முந்தைய அதிபர் பயன்படுத்திய மிகப் பெரிய படுக்கை அறை, குளியல் அறை என அனைத்திலும் செல்ஃபி எடுக்கவும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP