வெறுப்புப் பதிவுகளுக்கே அதிக லைக்ஸ்: ஃபேஸ்புக் கவலை

ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ள வன்முறை தொடர்பான பதிவுகளுக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் கவலைத் தெரிவித்துள்ளது.
 | 

வெறுப்புப் பதிவுகளுக்கே அதிக லைக்ஸ்: ஃபேஸ்புக் கவலை

வெறுப்புப் பதிவுகளுக்கே அதிக லைக்ஸ்: ஃபேஸ்புக் கவலைஃபேஸ்புக்கில் பதிவிடப்படும் வன்முறை தொடர்பான பதிவுகளுக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 

3 மாதங்களில் 58 கோடி போலி கணக்குகள் மூடல்:

கடந்த ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் வரையில், 3 மாதங்களில் மட்டும் 58 கோடியே 30 லட்சம் போலி ஃபேஸ்புக் கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு கண்மூடித்தனமாக அனுப்பப்பட்ட (ஸ்பேம்) 83 கோடியே 70 லட்சம் பதிவுகள், 3 மாதங்களில் அகற்றப்பட்டு உள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஃபேஸ்புக் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை எழுந்த நிலையில், இப்போது சில தகவல்கள் கொண்ட அறிக்கையை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வெறுப்புப் பேச்சு:

இதுவரை 25 லட்சம் வெறுப்புணர்வு பேச்சுகளையும் (Hate speech) கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. செக்ஸ் மற்றும் வன்முறை படங்கள் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ததற்காக 3 கோடி பதிவுகளுக்கு ஃபேஸ்புக் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

வெறுப்புப் பதிவுகளுக்கே அதிக லைக்ஸ்: ஃபேஸ்புக் கவலை

ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ள வன்முறை தொடர்பான பதிவுகளுக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தனது அறிக்கையில் கவலைத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 12 லட்சம் ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வன்முறைப் பதிவுகள் தொடர்பான எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP