எச் 1 பி விசாவில் மேலும் நெருக்கடி: இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு தொடரும் சிக்கல்

அமெரிக்காவில் எச்1 பி விசா நீட்டிப்பு கோருவோரின் விண்ணப்பங்களை, குடியுரிமை அதிகாரிகளே நேரடியாக நிராகரிக்கலாம் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அதிகாரம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

எச் 1 பி விசாவில் மேலும் நெருக்கடி: இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு தொடரும் சிக்கல்

அமெரிக்காவில் எச்1 பி விசா நீட்டிப்பு கோருவோரின் விண்ணப்பங்களை, குடியுரிமை அதிகாரிகளே நேரடியாக நிராகரிக்கலாம் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அதிகாரம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணிபுரிபவர்கள் 3 ஆண்டுகளுக்கு பின், விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது கேட்கப்பட்ட அடிப்படை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அவ்வாறு ஆவணங்களை சமர்பிக்கத் தவறினால்,அந்த விண்ணப்பங்களை குடியுரிமை அதிகாரிகளே நேரடியாக நிராகரிக்கலாம் என்ற புதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை செப்டம்பர் 11ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது.  இதனால் ஒரு முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் சரி செய்ய வாய்ப்பு இல்லாமல் போகும். 

இந்தியாவில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் எச்1பி விசாவை பயன்படுத்தியே அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். விசா நீட்டிப்புக்காக விண்ணப்பிப்போர்  240 நாட்கள் வரை அமெரிக்காவில் தங்கியிருக்கலாம் என்ற விதியும் சமீபத்தில் மாற்றப்பட்டது. விசா காலம் முடிந்ததும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

மேலும்,  பணியமர்த்தப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் கல்வி தகுதி, அவரது பணி விவரம், பணி சார்ந்த அவரது திறன் ஆகியவற்றை குறிப்பிட்டு அதற்கான சான்றுகளை இணைக்க வேண்டும்.

மூன்றாவது நபரின் பணியிடங்களில் ஊழியர்கள் இணைவதாக இருந்தால் எச்-1பி விசா மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படாது. அதற்கு பதிலாக, அவர் பணியாற்றும் காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும். பின்னர் ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து விசாவை புதுப்பிக்க வேண்டும் என பல சிக்கலான நடைமுறைகளை மாற்றங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP