மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: அமெரிக்க தொழிலதிபர் சொல்லும் காரணம் தெரியுமா?

பிரதமர் மோடியை வரும் தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுக்காமல் போனால், இந்தியாவின் வளர்ச்சிக்கு சிக்கல் ஏற்படும் என அமெரிக்க தொழிலதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து செயல்படும் முன்னணி ஹார்ட்வேர் பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் சிஸ்கோ சிஸ்டம். இந்த நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. ஜான் சாம்பர்ஸ் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர், " இந்தியா மிகவும் சிக்கலான காலகட்டத்தி இருக்கிறது. இந்திய பொருளாதாரம் எழுச்சி பெற இன்னும் 10 ஆண்டு காலமாவது கடினமான முடிவுகளை எடுப்பது அவசியம். அந்த வகையில், உங்களது பிரதமர் மிகவும் துணிச்சலானவர். உங்கள் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போதும் நாட்டின் எதிர்காலத்தை பற்றி தான் சிந்திக்கின்றார். 

2019-ல் வரும் நாடாளுமன்றத்  தேர்தலில் மீண்டும் மோடியை பிரதமராக வாய்ப்பு தரப்படவில்லையெனில் இந்தியாவின் வளர்ச்சிக்கு சிக்கல் ஏற்படும்.  எனவே உலகளவில் இந்தியா வலிமையான ஒரு வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும்" என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP