இந்தியாவுக்கு ஓர் தந்தையாகத் திகழ்கிறார் மோடி - ட்ரம்ப் புகழாரம்!!!

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவரும் நியூயார்க் நகரில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உரையாடினர். அப்போது, காஷ்மீர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "காஷ்மீர் விவகாரம் மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற பிரச்சனைகளை மோடியே கவனித்துக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்" என டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
 | 

இந்தியாவுக்கு ஓர் தந்தையாகத் திகழ்கிறார் மோடி - ட்ரம்ப் புகழாரம்!!!

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவரும் நியூயார்க் நகரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். அப்போது, காஷ்மீர் குறித்து ஓர் நிருபர் கேட்ட கேள்விக்கு, "காஷ்மீர் விவகாரம் மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற பிரச்சனைகளை மோடியே கவனித்துக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்" என டொனால்ட் ட்ரம்ப் எடுத்துக் கூறினார். 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை மாநாட்டிற்காக இரு தலைவர்களும் நியூயார்க் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நேற்று இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். அப்போது ட்ரம்பிடம், காஷ்மர் விவகாரம் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு,  "காஷ்மீர் விவகாரம் மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற பிரச்சனைகளை மோடியே கவனித்துக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். 

அல் கொய்தாவிற்கு பயிற்சி அளித்தோம் என்று இம்ரான் கான் ஒப்புக் கொண்டதில் தங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, "இதற்கு பதிலளிக்க வேண்டியது நானல்ல, மோடி தான். ஆனால் அவர் தான் ஏற்கனவே பதில் அளித்து விட்டாரே என ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

"ஹௌடி மோடி" நிகழ்ச்சியில், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் காஷ்மீர் குறித்த இந்திய பிரதமரின் மிகுந்த ஆக்ரோஷமான பேச்சையும், அதற்கு அந்த அவையில் இருந்த அத்துணை பேரும் பெருத்த கரகோஷத்துடன் தங்களின் ஆதரவைத் தெரிவித்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

"எல்லோருக்கும் இந்த மனிதரை மிகவும் பிடித்திருக்கிறது. இவரால் இந்தியாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. சர்வதேச பட்டியலில் இந்தியாவை மிக முக்கிய நாடாக மாற்றியுள்ளார். ஒரு தந்தை தன் பிள்ளையை எப்படி அரவணைத்து காப்பாரோ, அப்படிதான் மோடி இந்தியாவை காத்து வருகிறார். இந்தியாவுக்கு ஒரு தந்தையாக திகழ்கிறார் மோடி" என மோடியை அன்புடன் புகழ்ந்துள்ளார் ட்ரம்ப்.

"தேசத்தின் தந்தை" என ஒருவரைக் குறிப்பிடுவது மேற்கத்திய கலாசார அடையாளம் ஆகும். ஆனால் நம் கலாசார அமைப்பின்படி, நரேந்திர மோடியை அவருடைய பணிகள் குறித்து உணர்ச்சிப் பெருக்கு மிகுந்த நிலையில் பாராட்ட வேண்டுமென்றால், அவரை "பாரதத்தாயின் தவப்புதல்வன்" என்று வேண்டுமானால் கூறலாம் என்பதை நியூஸ்டிஎம் ஆசிரியர் குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. இந்த தேசத்தின் மக்களாகிய நாம் அனைவரும் பாரத்தாய்க்கு மகன்களே ஆவோம்.  

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP