’மிஷன் சக்தி’: அமெரிக்கா என்ன சொல்கிறது?

விண்வெளி பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும் என்று, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக இந்தியா சோதித்த நிலையில் அமெரிக்கா தனது கருத்தை தெரிவித்துள்ளது.
 | 

’மிஷன் சக்தி’: அமெரிக்கா என்ன சொல்கிறது?

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக இந்தியா சோதித்த நிலையில், விண்வெளி பாதுகாப்பு  மற்றும் ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும் என்று அமெரிக்கா தனது கருத்தை தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்கைக்கோள்களை, ஏவுகணை மூலம் துல்லியமாக தாக்கி அழிக்கும் ’மிஷன் சக்தி’ திட்டம் வெற்றிகரகமாக சோதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ’மிஷன் சக்தி’ திட்டம் தொடர்பாக அமெரிக்கா தனது கருத்தை தெரிவித்துள்ளது. அதில், விண்வெளி பாதுகாப்பு  மற்றும் ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும் என்றும், செயற்கைகோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளதாகவும், விண்வெளி குப்பைகள் தொடர்பான இந்திய அரசின் அறிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளோம் என்றும்  தெரிவித்துள்ளது.

செயற்கைகோளை தாக்கி அழிக்கும் உலக நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து, இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP