டிரம்புக்கு எதிராக லட்சக்கணக்கான பெண்கள் போராட்டம்

Padmavat protests turn violent: Gujarat comes to a still
 | 

டிரம்புக்கு எதிராக லட்சக்கணக்கான பெண்கள் போராட்டம்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக லட்சணக்கான பெண்கள் வீதிகளில் இறங்கி பேரணி நடத்தினர்.

கடந்த ஒரு வருடத்தில், டிரம்ப் அரசில் இருந்த முக்கிய ஆலோசகர்கள், மூத்த அதிகாரிகள் என பலர் தங்களது பதவியை ராஜினமா செய்துள்ளனர். மூன்று பேர் மீது விசாரணை கமிஷன் வழக்கு தொடுத்துள்ளது. பல முனைகளில் எதிர்ப்புகளை சந்தித்து வரும் டிரம்ப்பின் அரசு, சரியான நேரத்தில் பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாததால், முடங்கி போய் உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர அனைத்து அரசு சேவைகளும் மூடப்பட்டுள்ளன. இது மேலும், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, டிரம்ப் பதவியேற்றதை அடுத்து, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக லட்சக்கணக்கான பெண்கள் கடந்த வருடம் பேரணி நடத்தினர். அதேபோல, முக்கிய அமெரிக்க நகரங்களில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. சினிமா நடிகைகள் உட்பட பல பிரபலங்களும் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 6 லட்சம் பேர் பேரணி நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, தலைநகர் வாஷிங்க்டன், சிகாகோ, ஆஸ்டின் போன்ற நகரங்களிலும் லட்சக் கணக்கானோர் பேரணி நடத்தினர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP