பெயர் விவகாரத்தால் லட்சக்கணக்கான கிரேக்கர்கள் போராட்டம்

பெயர் விவகாரத்தால் லட்சக்கணக்கான கிரேக்கர்கள் போராட்டம்
 | 

பெயர் விவகாரத்தால் லட்சக்கணக்கான கிரேக்கர்கள் போராட்டம்


மேசிடோனியா நாட்டின் பெயரில் உள்ள சர்ச்சையை தீர்க்க கிரேக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான கிரேக்கர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் அலெக்சிஸ் ட்சிப்ராஸ், மேசிடோனியா நாட்டுடன் சமரசத்துக்கு வர முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், அதை எதிர்த்து போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் சுமார் 15 லட்சம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறினாலும், கிரேக்க அரசு சார்பில், அது மிகவும் மிகைப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.4 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

"மேசிடோனியா எங்களுடையது", "நியாயம் கிடைக்கும் வர நகர மாட்டோம்" என்றெல்லாம் கூறி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் கிரேக்க பிரதமர் சமராஸ் கலந்து கொண்டார். 

ஆனால், மக்கள் தனக்கு மிகப்பெரிய பெரும்பான்மை கொடுத்துள்ளதாகவும், இதுபோன்ற போராட்டங்களுக்கு பயந்து பின்வாங்க மாட்டேன் என்றும் பிரதமர் ட்சிப்ராஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

1991ம் ஆண்டு யுகோஸ்லாவியா போரின் முடிவில் மேசிடோனியா உருவாக்கப்பட்டது.  கிரேக்க நாட்டில் உள்ள பகுதிகள் மேசிடோனியா என அழைக்கப்படும் நிலையில், அண்டை நாடான மேசிடோனியா தங்களது இடத்தை சொந்தம் கொண்டாடக் கூடும் என்ற காரணத்தால், இரு நாடுகளுக்கும் இடையே பெயர் மாற்றம் வேண்டி சர்ச்சை நிலவி வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP