மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்(65) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு மைக்ரோசாப் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
 | 

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் (65) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், நன்கொடையாளர் மற்றும் மைக்ரோசாப்ட்-ன் இணை நிறுவனர் பால் ஆலன் (65) புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பால் ஆலனின் மறைவுக்கு மைக்ரோசாப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். பால் ஆலனின் மறைவு மைக்ரோசப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய இழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
அமெரிக்க நகரான சியாட்டிலில் பிறந்தவர் பால் ஆலன்.  தனது 14வது வயதில் லேக்சைடு பள்ளியில் படிக்கும்போதுதான் பில்கேட்ஸை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. அப்போது பில்கேட்ஸின் வயது 12.  இருவரும் சேர்ந்து தங்களது கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு கம்ப்யூட்டருக்கு மென்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர்.

இவர்கள் இருவரும் 1975-ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கினர்.  போல Q-DOS என்ற மென்பொருளைக் கண்டறிந்து, ஐபிஎம் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் ஓஎஸ்-ல் நிறுவினர். இது தான் தற்போதைய MS- DOS. இது இவர்களது முக்கிய கண்டுபிடிப்பாகவும் கணினிமைய உலகின் வரப்பிரசாதமாகவும் திகழ்ந்தது. 

பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை தொழிலநுட்ப வல்லுநராக 1983 வரை பால் ஆலன் இருந்தார்.  இவரை நிருவனத்தின் 'ஐடியா மேன்' ,'மேன் ஆஃப் ஆக்‌ஷன்' என்று அனைவரும் செல்லமாக அழைப்பர். தனது 30வது வயதில் உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்றார். பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்து நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றார். நோயை வெற்றிகண்டு மீண்டும் களமிறங்கி வல்கன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஆனால், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் ஓய்வு எடுத்து வந்தார். தனது சம்பாதியத்தை சமூகத்துக்குத் திருப்பித்தர வேண்டும் என்ற பல நற்பணிகளைச் செய்துவந்தார்.  சமீபத்தில் ஆப்ரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஆலன் வழங்கியுள்ளார். 'ஐடியா மேன்' என்ற புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP