எல்லை சுவர் கட்ட மெக்சிகோ தான் பணம் தரணும்: ட்ரம்ப் எச்சரிக்கை

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருபவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எல்லையில் மதில்சுவர் கட்ட மெக்சிகோ பணம் தர வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
 | 

மெக்சிகோ, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருவதாக அமெரிக்கா சமீப காலமாக குற்றஞ்சாட்டியுள்ளது.  இந்த நிலையில் நேற்று டென்னசி மாநிலத்தின் நாஸ்வில் பேசிய ட்ரம்ப், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களைத் தடுக்க மெக்சிகோ எந்த உதவியும் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

இதனால் எல்லையில் மதில் சுவர் எழுப்பப் போவதாகவும் அதற்கான தொகையை மெக்சிகோ செலுத்த வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார். 

இதற்குப் பதிலளிக்கும் வகையில் மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ தனது ட்விட்டரில் தெரிவிக்கையில், மதில் சுவர் கட்டுவதற்கு மெக்சிகோ இப்போது மட்டுமல்ல, எப்போதும் பணம் தராது எனக் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP