மே அல்லது ஜூனில் கிம் ஜாங்-ஐ சந்திக்கிறேன்: டிரம்ப் அறிவிப்பு

வரும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்கிறேன் என அமெரிக்க அதிபர் டொன்ல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
 | 

மே அல்லது ஜூனில் கிம் ஜாங்-ஐ சந்திக்கிறேன்: டிரம்ப் அறிவிப்பு

மே அல்லது ஜூனில் கிம் ஜாங்-ஐ சந்திக்கிறேன்: டிரம்ப் அறிவிப்புவரும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்கிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் முதன்முறையாக வரும் மே மாதம் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது, தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைப்பது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக வடகொரியா ஏற்கெனவே அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை டிரம்ப் நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் பேசுகையில், வடகொரிய அதிபரை வரும் மே மாதம் அல்லது ஜூன் மாதம் சந்திக்க உள்ளேன். இந்த சந்திப்பு மரியாதைக்குரிய ஒன்றாய் இருக்கும். இதன் மூலம் வடகொரியாவின் அணு ஆயுத குறைப்பிற்கான உடன்பாட்டை ஏற்படுத்த முடியும், என நம்புகிறேன் என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP