மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும்: சர்வதேச நாடுகள் ஐ.நா.விடம் மீண்டும் வலியுறுத்தல்!

ஜெய்ஷ் -இ - முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவனான மௌலானா மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதிகளுக்கான கருப்புப் பட்டியலில் சேர்ப்பதுடன், அவரது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என உலக நாடுகள், ஐ.நா.வை வலியுறுத்தியுள்ளன.
 | 

இதுதொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒர் தீர்மானத்தை நேற்று முன்மொழிந்துள்ளன. அதில், " இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், புல்வாமாவில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில், இந்திய துணை ராணுவப் படையினர் 40 பேர் பலியாகினர். 

இக்கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் -இ- முகம்மது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனவே, இந்த அமைப்பின் தலைவனான மெளலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகளுக்கான கருப்புப் பட்டியலில் உடனடியாக சேர்க்க வேண்டும். மேலும் அவரது சொத்துக்களையும் முடக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP