பாட்டியை தாக்கி பேரக்குழந்தைகளை கடத்த முயன்றவர் கைது

அமெரிக்காவில் வயதான மூதாட்டியை தாக்கி விட்டு அவருடைய பேரக்குழந்தைகளை காரில் கடத்திய இந்தியர் கைது செய்யப்பட்டார்.
 | 

பாட்டியை தாக்கி பேரக்குழந்தைகளை கடத்த முயன்றவர் கைது

அமெரிக்காவில் வயதான மூதாட்டியை தாக்கி விட்டு அவருடைய பேரக்குழந்தைகளை காரில் கடத்திய இந்தியர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் உள்ள நியுயார்க் நகரில் நிதா கபர்ன் என்ற 69 வயது மூதாட்டி தனது பேரக்குழந்தைகளுடன் அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார்.

அப்போது இந்தியாவை சேர்ந்த தல்வீர் சிங் என்ற இளைஞன் அந்த மூதாட்டியை தாக்கி கீழே தள்ளிவிட்டு காரில் இருந்த அவரின் பேரக்குழந்தைகளுடன் காரை கடத்தி சென்றான். இதனால் காரில் இருந்த பேரக்குழந்தைகள் உடனடியாக கதவை திறந்து கொண்டு கீழே குதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் காரை கடத்திய இளைஞனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த இளைஞரின் பெயர் தல்வீர் சிங் என்றும் அவர் போதைக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது. மேலும் காயமடைந்த மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP