அமெரிக்காவில் மகாத்மா காந்தி எழுதிய அஞ்சல் அட்டை ரூ.13 லட்சத்திற்கு ஏலம்

தேசத்தந்தை மகாத்மா காந்தி எழுதிய அஞ்சல் அட்டை அமெரிக்காவில் 13 லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
 | 

அமெரிக்காவில் மகாத்மா காந்தி எழுதிய அஞ்சல் அட்டை ரூ.13 லட்சத்திற்கு ஏலம்

தேசத்தந்தை மகாத்மா காந்தி எழுதிய அஞ்சல் அட்டை அமெரிக்காவில் 13 லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்கப்பட்டுள்ளது. 

தேசத்தந்தை மகாத்மா காந்தி தன் கைப்பட எழுதிய அஞ்சல் அட்டை கடிதம் ஒன்று அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டுள்ளது. ஆன்லைனில் விடப்பட்ட இந்த ஏலத்திற்கு பயங்கர போட்டி நிலவியது. இறுதியாக 20,233 டாலருக்கு விற்கப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் ரூபாய். இந்தக்கடிதம் காந்தி, பெண் விடுதலைக்காக போராடிய வீராங்கனை அன்னிபெசன்ட் அம்மையாருக்கு எழுதியுள்ளார். அஞ்சல் அட்டையின் இரு பக்கத்திலும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், 'எம்.ஆர்.காந்தி' என காந்தி அதில் கையெழுத்திட்டுள்ளார். இது நவம்பர் 30, 1924ல் எழுதப்பட்ட கடிதம் ஆகும். அந்த கடிதத்தில் தனது மகன் தேவதாஸ் காந்தியின் பயணம் குறித்து எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP