கணவனிடமிருந்து மனைவியை பிரித்த காதலன்.... நீதிமன்றம் வழங்கிய சூப்பர் தீர்ப்பு..!

வாஷிங்டனில் மனைவி தன்னை பிரிவதற்கு காரணமாக இருந்தவரிடம் இருந்து அபராதம் வசூலித்த விசித்திரம் அரங்கேறியுள்ளது.
 | 

கணவனிடமிருந்து மனைவியை பிரித்த காதலன்....  நீதிமன்றம் வழங்கிய சூப்பர் தீர்ப்பு..!

வாஷிங்டன் மாகாணத்தில் ஒரு விசித்திரமான வழக்கில் பிரமிக்கவைக்கும் தீர்ப்பை வழங்கி நீதிபதிகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர். பொதுவாக திருமண பந்த முறிவு தொடர்பான வழக்குகளில், மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்து பார்த்திருப்போம். ஆனால், வாஷிங்டனில், மனைவி தன்னை பிரிவதற்கு காரணமாக இருந்தவரிடம் இருந்து அபராதம் வசூலித்த விசித்திரம் அரங்கேறியுள்ளது. 

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் வசிப்பவர் கெவின் ஹோவர்ட் இவருக்கு திருமணமாகி 12 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இவரது மனைவி தன்னைவிட குறைவாக சம்பாதிப்பதாக கூறி, இவரை விவாகரத்து செய்துள்ளார். 

இதற்கிடையே மனைவியின் திடீர் மன மாற்றத்தை அறிய நினைத்த கெவின் ஹோவர்ட், தனியார் துப்பறிவாளரை நாடியுள்ளார். பின்னர் துப்பறிவாளரின் விசாரணையில் கெவின் ஹோவர்ட் மனைவிக்கும், உடன் பணிபுரியும் ஒருவருக்கும் இடையே உறவு இருந்தது  தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து தங்களுக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றத்தை மீண்டும் அனுகிய கெவின் ஹோவர்ட்  தங்களது திருமண பந்தம் பிரிவதற்கு, மனைவியின் மன மாற்றத்திற்கும் காரணமானவர் மீது ''பாசத்தை அந்நியப்படுத்துதல்" சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கியதோடு, $7,50,00 அமெரிக்க டாலரை கெவின் ஹோவர்ட்க்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது போன்ற பாசத்தை அந்நியப்படுத்துதல்" சட்டம்  ஹவாய், மிசிசிப்பி, நியூ மெக்ஸிகோ, தெற்கு டகோட்டா மற்றும் உட்டா ஆகிய ஐந்து அமெரிக்க மாநிலங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP