ஐ.நா சொல்வதை கேட்போம்: அமெரிக்கா சொல்வதையெல்லாம் கேட்க முடியாது - சுஷ்மா நறுக்

ஈரான் அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க அரசு விலகியதை தொடர்ந்து, தாங்களும் அமெரிக்காவை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 | 

ஈரான் நாட்டின் அணு ஆயுத தயாரிப்பை தடுக்க, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சேர்ந்து 2015ம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, தனது அணு ஆயுத தயாரிப்பை ஈரான் நிறுத்தியது. அதற்கு பதிலாக உலக நாடுகள், ஈரானில் புதிய திட்டங்கள் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்தன. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். ஐரோப்பிய தலைவர்கள், ட்ரம்பிப்பின் சொந்த ஆலோசகர்கள், கட்சித் தலைவர்கள் என யார் சொல்லியும் கேட்காமல், ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அமெரிக்காவின் நட்பு நாடுகளும், அதிலிருந்து விலகவும், ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்கவும் வலியுறுத்தினார். 

ஈரானுடன் நெருக்கமான போக்கை இந்தியா கடைபிடித்து வரும் நிலையில், இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார். அப்போது அவர், "ஐ.நா முடிவு செய்யும் பொருளாதார தடைகளை மட்டும் தான் இந்தியா ஏற்றுக்கொள்ளும். வேறு எந்த நாடும் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளை பின்பற்ற தேவையில்லை" என கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP